"கொரோனா மருந்து வெறும் 500 ரூபாய் தான்..." 'கொல்கத்தாவில்' பரபரப்பு 'விற்பனை'... ஒரு கிலோ 'மாட்டுச்சாணம்' ரூ.500... ஒரு லிட்டர் 'கோமியம்' ரூ. 500 முந்துபவர்களுக்கு 'முன்னுரிமை'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 18, 2020 10:08 AM

கொல்கத்தாவில் கொரோனா மருந்து எனக் கூறி மாட்டு சாணத்தையும், மாட்டு கோமியத்தையும் 500 ரூபாய்க்கு ஒருவர் விற்பனை செய்து வருகிறார்.

corona effect cow dung and urine sell for rupees 500

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல்வேறு வதந்திகளும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும், மாட்டுச் சாணம், மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா பரவாது உள்ளிட்ட வதந்திகள் மக்களிடையே பரவி வருகின்றன.

இந்தசூழலைப் பயன்படுத்திக் கொண்ட, கொல்கத்தாவைச் சேர்ந்த மாபட் அலி என்பவர், மாட்டுச் சாணத்தையும், மாட்டுச் சாணத்தையும் கொரோனா மருந்து எனக் கூறி விற்பனை செய்துவருகிறார்.

ஒரு லிட்டர் பசு மாட்டுக் கோமியத்தை 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை 500 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்.  அண்மையில் இந்து மகா சபாவினர் நடத்திய மாட்டுக் கோமியம் பார்ட்டியை டி.வி.யில் பார்த்து தான் தனக்கு இந்த யோசனை வந்ததாக அவர் கூறியுள்ளார். பசுமாட்டின் கோமியத்தை 500 ரூபாய்க்கும், ஜெர்சி பசுவின் கோமியத்தை 300 ரூபாய்க்கும் விற்பனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CORONA #MEDICINE #KOLKATA #COW DUNG #COW URINE