'என் கணவர் ஒரு அப்பாவி...' 'என்னால விதவையா வாழ முடியாது, அதனால...' நிர்பயா குற்றவாளியின் மனைவி நீதிமன்றத்தில் புதிய மனு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 18, 2020 12:20 PM

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் அக்‌ஷய் குமார் சிங் என்ற தூக்குத் தண்டனை கைதியின் மனைவி, ‘தான் விதவையாக வாழ விரும்பவில்லை, என் கணவருக்கு தூக்கு தண்டனை அளிப்பதற்கு முன் விவாகரத்து பெற்றுக் கொடுங்கள்’ என்று பிஹார் அவுரங்காபாத் உள்ளூர் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

The wife of the executioner filed for divorce with her husband

மார்ச் இருபதாம் தேதி நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் கணவன் சாவுக்குப் பிறகு தான் விதவை என்ற பெயருடன் இந்த சமூகத்தில் வாழ விரும்பவில்லை எனவே தூக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பே கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கித் தருமாறு கோர்ட்டில் அவர் மனைவி மனு செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் மார்ச் பத்தொன்பதாம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா கூறும்போது தன்னுடைய அப்பாவி  என்றும், அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சட்ட ரீதியாக விவாகரத்து கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புனிதாவின் வழக்கறிஞர் கூறும்போது, ‘கணவர் மீது பலாத்காரம், மனிதவிரோதக் கொலைக் குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனைவி விவாகரத்து பெற உரிமையுள்ளது” என்று தெரிவித்துள்ளார்..

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் பல வழிகளில் தூக்குத் தண்டனையை தாமதப்படுத்த வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஆனால் சட்ட நிபுணர்கள் சிலர் கூறுகையில் எல்லாவித சட்ட நடைமுறைகளும் குற்றவாளிகளைப் பொறுத்தவரை முடிந்து விட்டன. ஆகவே இனி தண்டனையை தள்ளிப்போட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Tags : #DELHI #NIRBAYA