'தூக்கிலிட்டவருக்கும்' 'மனநல' ஆலோசனை... 4 'குற்றவாளிகளை' தூக்கிலிட.... 'பவன் ஜல்லாட்' வாங்கிய 'சம்பளம்' எவ்வளவு தெரியுமா?...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 20, 2020 11:00 AM

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Do you know the salary of bhawan Jallat for execution?

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியவல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கில் போடப்பட்டனர்.  நான்கு பேரையும் தூக்கிலிடும் பணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்ற ஊழியரின் சேவையை பயன்படுத்த திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக உத்தரபிரதேச சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி அவரை திகார் சிறைக்கு வரவழைத்தது.

பவன் ஜல்லாட், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். 2 நாட்களுக்கு முன்னதாகவே திஹார் சிறைக்கு வந்த பவன், தனி அறையில் தங்க வைக்கப்பட்டார். இன்று தூக்கு நிறைவேற்றப்பட உள்ளது குறித்து அவருக்கு நள்ளிரவில் தகவல் அளிக்கப்பட்டது. அதற்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்தார். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் 8 மணிலா தூக்கு கயிறுகளை சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். 8 கயிறுகளில் நான்கை தேர்ந்தெடுத்த பவன், மீதமுள்ள 4 கயிறுகளை தேவைப்படின் பயன்படுத்த வைத்துக்கொண்டார்.

இறுதியில் டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் காலை சரியாக 5.37 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூ. 20,000 என ரூ. 80,000 ஊதியமாக தரப்படுகிறது.

தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து இறந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர் அதனை பதிவு செய்தார்.

Tags : #BHAVAN JALLAT #NIRBHAYA #DELHI #CONVICTS HANGING #SALARY