'எங்களையே ஓவர் டேக் பண்ணிட்டான்'... 'இதையா இந்தியர்கள் அதிக நேரம் பாத்திருக்காங்க'... ஆடிப்போன 'பேஸ்புக்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 03, 2020 11:02 AM

2016ம் ஆண்டு அறிமுகமான டிக்டாக் பேஸ்புக்கை ஆட்டம் காண வைத்துள்ளது. அதில் இந்தியர்கள் செலவிட்ட நேரத்தை கண்டு பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Indians spent about 5.5 billion hours on TikTok in 2019

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை இளைஞர்கள் மட்டுமல்லாது. பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் டிக்டாக் செயலி லான்ச் ஆனது. அந்த சமயத்தில் இருந்து அது இளசுகள் மத்தியில் மிக வேகமாக பிரபலமடைந்தது. அதில் பதிவிடும் வீடியோகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், அது சத்தமில்லாமல் அசுர தனமாக வளர்ந்துள்ளது.

இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு டிக்டாக் செயலியில், இந்தியர்கள் 5.5 பில்லியன் மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. அதே நேரத்தில் இது கடந்த 2018ம் ஆண்டை விட ஆறு மடங்கு அதிகம் என, ஆப் ஆனி (App Annie) என்ற செயலி பகுப்பாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 இன் டிசம்பர் மாதம் மட்டும் டிக்டாக் செயலின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை, 90 சதவீதம் உயர்ந்து 91 மில்லியன் மணி நேரங்கள் அதிகரித்துள்ளது. அதே மாதம் பேஸ்புக் அதன் பயனர் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் மட்டுமே உயர்ந்து 25.5 பில்லியன் நேரங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே சென்சார் டவர் வெளியிட்டுள்ள தரவின்படி, 2019 இல் மட்டும் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் 323 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் பேஸ்புக் செயலியை 156 மில்லியன் முறை மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்புக் மீது பயனாளர்கள் வைத்திருந்த கவனம் எல்லாம் சிதறி, தற்போது 2 வருடங்களுக்கு முன்பு அறிமுகமான டிக்டாக் செயலி மீது திரும்பியுள்ள நிகழ்வு, பேஸ்புக் உள்ளிட்ட மற்ற பழைய சமூக வலைத்தளங்களை கொஞ்சம் ஆடி தான் போக செய்துள்ளது என கூறலாம்.

Tags : #FACEBOOK #INSTAGRAM #5.5 BILLION HOURS #TIKTOK #APP ANNIE