'6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...' அதோடு விடாமல் சிறுமியின் கண்ணையும்...' ஊரடங்கிலும் தொடரும் மனித வக்கிரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணின் கண்ணையும் தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தமாவ் பகுதியில் 6 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை காணாமல் போயுள்ளார். வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி மர்ம நபர்களால் கடத்த பட்டிருப்பதை உணர்ந்த பெற்றோர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடிவந்த போலீசாருக்கு சிறுமியின் வீட்டருகே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. காணாமல் போன சிறுமி ஏப்ரல் 23-ம் தேதி காலை உயிருக்கு ஆபத்தான முறையில் மீட்கப்பட்டார்.
மேலும் அந்த சிறுமியின் வீட்டின் அருகிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் எனவும், பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த சிறுமியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தற்போது மிகுந்த அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி அறிவித்த போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கையாக தனிப்படை குழு, அப்பகுதியில் சந்தேகப்படக் கூடிய பலரை நாங்கள் விசாரித்து வருகிறோம் என மூத்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் சிங் சவுகான் தகவல் அளித்துள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்திலும் இதுபோன்று வக்கிரம் எண்ணம் படைத்த மிருகங்களின் செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சிறுமியை துன்புறுத்திய நபர்களை கண்டுபிடித்து தக்கநடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
