WATCH VIDEO: ‘லாக் டவுன் நேரத்தில் ஏன் இப்படி பண்றீங்க?’... ‘திரைப்படம் போலவே, நிஜத்தில் வெளுத்து வாங்கும் குழந்தை நட்சத்திரம்’... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சினிமாவில் குழந்தை நட்சத்திரமான பேபி மானஸ்வி, கொரோனா நேரத்தில் லாக் டவுனையும் மீறி வெளியே சுற்றித் திரிபவர்களை வெளுத்து வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல காமெடி நடிகரான கொட்டாச்சி - டப்பிங் கலைஞர் அஞ்சலி என்பவர்களது மகள் மானஸ்வி. இவர் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அனுமதியின்றி உள்ளே நுழையும் போலீஸ் ஒருவரை மிரட்டும் காட்சி மூலம் பேபி மானஸ்வி பிரபலமடைந்தவர்.
இந்நிலையில், அதே தொணியில் மக்களின் நலனுக்காக, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை பேபி மானஸ்வி வெளுத்து வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவுதல் குறைய வேண்டும் என்றால், நாம் அனைவரும் வீட்டிலிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
