'அந்த பிஞ்சு விரல தொடும் போது நான் உருகி போயிட்டேன்!'.. குஜராத்தில் பிறந்த வாரிசை காண முடியாமல் தவித்த... பெங்களூரு பெற்றோரின் வலிமிகுந்த பாசப் போராட்டம்!.. மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 16, 2020 02:46 PM

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த குழந்தை, ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களூருவில் உள்ள பெற்றோரிடம் வந்தடைந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

surrogate baby born in surat reach her parents in bangalore

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தம்பதி நீண்ட வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்துள்ளனர். பெண்ணின் கர்ப்ப பையில் சில குறைபாடுகள் இருந்ததால், அவரால் கருவைச் சுமந்து குழந்தை பெற முடியாமல் போனது. எனினும், வாடகைத் தாய் முறை மூலம் அந்த தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, அவர்களின் குழந்தை கனவு கடந்த மாதம் 29ம் தேதி, குஜராத் மாநிலம் சூரத்தில் நனவாகியது. ஆனால், மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பெற்றோர்களால் தங்களின் வாரிசை நேரில் காண முடியாமல் போனது.

குழந்தையின் ஸ்பரிசத்தை உணர முடியாமல் தவித்த பெற்றோரின் பாசப் போராட்டம் மருத்துவர்களையும் கலங்கடித்தது. பெற்றோர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும், குழந்தையைச் சந்திப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு, டெல்லியில் இருந்து 'ஏர் ஏம்புலன்ஸ்'-ஐ பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, சூரத் மருத்துவமனையில் இருக்கும் செவிலியர் குழந்தையை, ஏர் ஏம்புலன்ஸ் செவிலியரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். அதன் பின், ஆகாய மார்க்கமாக வந்த குழந்தை, அடுத்த மூன்று மணி நேரத்தில் தன்னுடைய தந்தையின் கைகளில் தவிழ்ந்தது.

மேலும், தங்களுடைய குழந்தையை முதன் முறையாக, கைகளில் தொட்டு ஏந்திய பொழுது எல்லையில்லா ஆனந்தத்தை அடைந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பதற்றத்தில் இருக்கும் மக்களுக்கு, இந்த சம்பவம் வாழ்க்கையின் மீதான நன்மதிப்பையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.