'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு!'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்!'
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த மேரி அகியேவா என்கிற கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் கர்ப்பிணியாக இருந்த அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஈஸ்டர் தினத்தன்று மேரிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேரியின் குழந்தைக்கு நோய்த்தொற்று உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது.
