பிறந்து '3 நாட்களே' ஆன குழந்தைக்கும், 'தாய்க்கும்' கொரோனா... 'அதிர்ந்துபோன' தந்தை வீடியோவில் 'உருக்கம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 03, 2020 11:16 AM

மும்பையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Mumbai 3 Day Old Baby Mother Tests Coronavirus Positive

மும்பை செம்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 26ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும், குழந்தையும் இருந்த அறையில் கொரோனா பாதித்த ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பெண் மற்றும் பிறந்து 3 நாட்களே ஆன அவருடைய குழந்தை இருவருக்கும்  கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது குழந்தை மற்றும் மனைவிக்கு நல்ல சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனை ஊழியர்களால் தனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்க கூடாது எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.

Tags : #CORONAVIRUS #MUMBAI #BABY #COVID-19 #MOTHER #FATHER