'ஜியோவ' கடுப்பேத்துறதே வேலையா போச்சு.. 39 ரூபாய்க்கு செம 'வொர்த்தான' திட்டம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Nov 06, 2019 03:23 PM
ஜியோ 6 பைசா அறிவிப்பை என்று வெளியிட்டதோ அன்றில் இருந்து ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் எக்கச்சக்க ஆபர்களை வெளியிட்டு ஜியோவை தொடர்ந்து கடுப்பேற்றி வருகின்றன.

அந்தவகையில் 39 ஆல்ரவுண்டர் பிளான் ஒன்றை வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உங்களுக்கு 39 ரூபாய் டாக்டைம் முழுவதுமாக கிடைக்கும். இதுபோல 100 எம்பி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் என்ற சலுகைகளுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வோடபோன் 35 ரூபாய் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது உங்களுக்கு 26 ரூபாய் மட்டுமே டாக்டைம் கிடைக்கும்.
100 எம்பி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி, வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் எல்லாம் ஒரேமாதிரி இருந்தாலும் நீங்கள் 4 ரூபாய் அதிகம் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு முழு டாக்டைம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் முழு டாக்டைம் வழங்கினாலும் 30 ரூபாய்க்கு மட்டுமே 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மீதமுள்ள 9 ரூபாயை நீங்கள் 7 நாட்களுக்குள் பேசி முடித்து விட வேண்டும்.தற்போது வோடபோன் இந்த திட்டத்தை குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கி சோதித்து வருகிறது.
இதுதவிர ரூபாய் 15 மற்றும் ரூபாய் 29 ஆல்ரவுண்டர் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு திட்டங்களிலும் டாக்டைம் கிடைக்காது. எனினும் இரண்டு திட்டங்களும் 30 பைசாவுக்கு குரல் அழைப்புகளை வழங்குகின்றன. 15 ரூபாய் திட்டம் 3 நாட்களுக்கும், 29 ரூபாய் திட்டம் 7 நாட்களுக்கும் செல்லுபடி ஆகும். இதேபோல முன்னதாக 45, 65 ரூபாய்களுக்கு ஆல்ரவுண்டர் திட்டங்களையும் வோடபோன் அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
