‘ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில்’.. ‘13 பேர் பலியான பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 13, 2019 11:36 AM

போபாலில் இன்று காலை படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

MP 13 killed as boat capsizes during immersion of Ganesh idol

மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே கட்லாபுரா பகுதியில் உள்ள ஏரியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஏரியில் கவிழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கி இருக்கலாம் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா தெரிவித்துள்ளார்.

Tags : #MADHYA PRADESH #BHOPAL #BOAT #GANESHIDOL #LAKE