தாத்தாவின் 'தலையில்' தொடர்ந்து முளைக்கும் 'பேய்க்கொம்பு'.. காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Sep 15, 2019 01:33 PM
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த சியாம் லால் யாதவ் (74) என்னும் முதியவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் அடிபட்டதற்காக சிகிச்சை எடுத்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து இவருக்கு தலையில் கொம்பு முளைக்க ஆரம்பித்து உள்ளது.ஆரம்பத்தில் கைகளால் அதை உடைத்து இருக்கிறார்.
எனினும் நாளடைவில் கொம்பு மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது. இதனால் பயந்து போன சியாம் மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். இதனைப்பார்த்த மருத்துவர்கள் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து முடிவில் இது பேய்க்கொம்பு(Devil's Horn) என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக செபசீகஸ் கொம்பு என இது அழைக்கப்படும் என்றும்,இது கை, கால், தலை என உடலில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது சியாம் லாலிற்கு தலையில் ஏற்பட்டுள்ளது. இந்த வியாதி தான் எனவும், அது தலையில் கோர்ட்டின் அதிகமாகச் சுரப்பதால் அது ஒரே இடத்தில் குவிந்து கொம்பாக வளர்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவில் முன்னர் ஒரு ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் இந்த வியாதி சிலருக்கு அதுவும் நேரடியாகச் சூரிய வெளிச்சம் தோல் பகுதியில் படும்போது, ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சியாம் லாலின் தலையில் இருந்து இந்த பேய்க்கொம்பு அறுவைசிகிச்சை வழியாக அகற்றப்பட்டுள்ளது.இந்த அரிய வழக்கு சர்வதேச அறுவை சிகிச்சை இதழில்(International Journal of Surgery) வெளியிட அனுப்பப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.