‘தல’ தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு உண்மையா..? ரசிகரின் கேள்விக்கு சிஎஸ்கேவின் வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 13, 2019 12:38 PM

தோனியின் ஓய்வு குறித்து பரவிய தகவல் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

CSK tweet about rumours on MS Dhoni\'s retirement

விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2016 -ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். அதில் தோனியுடன் இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டு,  ‘இது என்னால் மறக்க முடியாத போட்டி. ஸ்பெஷலான இரவு. பிட்னஸ் தேர்வைப்போல் என்னை இவர் (தோனி ) ஓட வைத்தார்’ குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், இது தோனியின் ஓய்வு அறிவிப்பை உணர்த்துவது போல் இருப்பதாக எண்ணிவிட்டனர். இதனால் தோனி ஓய்வு முடிவை எடுக்கக் கூடாது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். இதனை அடுத்து இது பொய்யான தகவல் என தோனியின் மனைவி ஷாக்சி தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் தோனி ஓய்வு குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை என இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில்  ‘இன்று இல்லை’ என தோனியின் ஓய்வு குறித்து பதிவிட்டுள்ளது.

Tags : #CSK #MSDHONI #RETIREMENT #TEAMINDIA