VIDEO: அச்சு அசலா 'மைக்கேல் ஜாக்சன்' மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Selvakumar | Jan 15, 2020 10:57 AM
டிக் டாக்கில் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு சமூக வலைதளமான டிக் டாக்கை உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பலரும் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் பதிவேற்றி வருகின்றனர். அந்தவகையில் பாபாஜாக்சன் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளார். அதில் மைக்கேல் ஜாக்சன் போன்று மூன்வாக் செய்து நடமாடி அசத்தியுள்ளார்.
Smoothest airwalker I have seen. Who is this man ? https://t.co/HojQdJowMD
— Hrithik Roshan (@iHrithik) January 13, 2020
இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், யார் இந்த இளைஞன் என்ற கேள்வி எழுப்பி பாராட்டைத் தெரிவித்துள்ளார். மேலும் பிரபுதேவா, சுனில் ஷெட்டி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
