‘தன் அம்மா உட்பட 8 பேரை சுட்டுக்கொன்ற நபர்!’.. ‘கடைசியாக சடலமாக மீட்கப்பட்ட பயங்கர சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி ஆகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் Hanau நகரத்தில் இரவில் பார் நடத்தியவர்கள், காரில் வந்தவர்கள் என வெவ்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துகொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தி 9 பேரை நபர் ஒருவர் சுட்டதால் அவர்களுள் 8 பேர் பலியாகியுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.ஜெர்மனியின் புகழ்பெற்ற Frankfurt பகுதியில் இருந்து 16 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ளது Hesse எனும் பகுதி. இங்கு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான நபர் யாரென்று தேடி போலீஸார் தேடி வந்தனர்.
இறுதியாக, தான் வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் அந்த 43 வயது கொலையாளி, தன் 72 வயது அம்மாவையும் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டு உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டதாக Hesse போலீஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த கொலையாளி ஒரு வலதுசாரி தீவிரவாதி என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மொத்தமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலையாளி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
