“பல பொண்ணுங்களோட பழகுனாரு!”.. “டிக் டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த கணவர்!”.. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ராஜசேகர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது. பின்னர் இருவரும் சமாதானம் ஆயினர். ஆனால் டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர் தொடர்ந்து டிக்டாக்கில் பல வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். நாளடைவில் டிக்டாக்கில் பல பெண்களுடன் வீடியோ வெளியிட்ட, தனது கணவர் ராஜசேகரின் போக்கு முற்றிலும் மாறியதால் சுகன்யா அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டை விட்டுப் போன ராஜசேகர் வீடு திரும்பவில்லை என்று
சுகன்யா போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிக ஆர்வம் காட்டிவந்த கவிநயா என்கிற பெண்ணை காணவில்லை என்று அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி காலத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி கடலூரைச் சேர்ந்த ராஜசேகர் உடன் பேசி வந்ததும் இருவரும் ஒன்றாக இணைந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டிருந்ததும் புதுக்கோட்டை போலீஸாருக்கு தெரியவந்தது. இந்த தகவல் கடலூர் போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை அறிந்த சுகன்யாவும், தனது கணவர் ராஜசேகருக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு உள்ளதாகவும், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும் கடலூர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன் பின் இரு மாவட்ட போலீஸாரும் ராஜசேகரை தேடும் பணியில் சுற்றித் திரிந்தபோது, கடைசியாக ஒருவழியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றி திரிந்த ராஜசேகர் மற்றும் கவிநயாவை போலீஸார் கண்டுபிடித்தனர். விசாரித்தபோது ராஜசேகர் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டு கவிநயாவை காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் கவிநயாவின் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சுகன்யா அளித்த புகாரின் பேரில் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
