ஒரேயடியா 'கருகிப்போச்சுமா'... பிரபல 'நடிகரின்' மகளை... பங்கமாக 'கலாய்த்த' முன்னணி வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் நடிகர் கே.எல்.ராகுல், பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் கிண்டலடித்து இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல அவ்வப்போது இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது விடுமுறையில் இருக்கும் கே.எல்.ராகுல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அதியா ஷெட்டியை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். விஷயம் இதுதான். அதியா ஷெட்டி செய்த பனானா பிரெட் கருகிவிட்டது. இதைப்பார்த்த ராகுல் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில்,''எதிர்பார்ப்பு, ரியாலிட்டி,'' என நன்றாக இருக்கும் பிரெட் ஒன்றையும், அதியா செய்த கருகிப்போன பிரெட்டையும் கம்பேர் செய்து கிண்டலடித்து இருக்கிறார்.
