'இப்போ நான் ஃபேமஸ் ஆயிட்டேன்...' 'எல்லாரும் கடை முன்னாடி நின்னு செல்ஃபி எடுக்குறாங்க...' பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த கொரோனா டெக்ஸ்டைல்ஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசால் உலகமே பயத்தில் இருக்கும் நிலையில் பல வருடங்கள் முன்பு கேரளாவில் ஒரு நபர் தனது ஜவுளி கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்திருந்தது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

கடந்த 5 மாதங்களாக உலக மக்கள் அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ். இதனால் 7174 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி அனைவரையும் பீதி அடைய செய்த இந்த கொரோனா வைரஸ் பெயரை பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய ஜவுளிக்கடைக்கு வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த கரோனா பரீத்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள மூவட்டுப்புழா. இந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது ஜவுளிக்கடைக்கு CORONO TEXTILE என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிகழ்வு தற்போது அனைவராலும் ஆச்சர்யத்தோடு பேசப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து, “இப்போது நான் இங்கு மிகவும் பிரபலம். பலரும் என்னுடன், இந்தக் கடையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் செல்கின்றனர். என் கடை வழியாக வாகனங்களில் செல்வோர், காரில் செல்பவர்கள் தங்கள் தலையை வெளியில் நீட்டி கடையை ஒரு பார்வை பார்த்து விட்டே செல்கின்றனர்” என்று கொரோனா ஜவுளிக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த பெயரின் அர்த்தத்தை அகராதியில் பார்த்தேன், அப்போது கொரோனா என்ற இந்த வார்த்தை எனக்குப் பிடித்துப் போய்விட்டது, இன்று இந்த வார்த்தைப் பலரையும் அச்சுறுத்தி வருகிறது” என்று கூறியுள்ளார்.
தற்போது அவர் தன்னுடைய கொரோனா ஜவுளிக்கடையில் கிருமி நாசினி தெளித்து தன் கடைக்கு வருபவர்கள் அனைவருக்கும் சானிடைசர் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
