"மருந்து கண்டுபிடித்து விட்டோம்..." "இது கொரோனாவில் 7வது வகை வைரஸ்..." "முதல் 6 வகைக்கு நாங்கள் தான் மருந்து கண்டுபிடித்தோம்..." 'ஹாலந்து' விஞ்ஞானிகள் 'சாதனை' ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 17, 2020 12:43 PM

ஹாலந்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் 10 ஆய்வாளர்கள் தாங்கள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆய்வு குழுவினர் கொரோனா வைரசின் முதல் 6 பிரிவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10 Holland scientists say they have discovered the Corona vaccine

தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 என்ற வைரஸ் கொரோனா வைரஸ் குடும்பத்தில் 7 வகை வைரசாகும்.

ஏற்கெனவே 6 வகை வைரஸ்கள் பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இவை பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாததால் வெளியில் தெரியவில்லை. இந்நிலையில், தற்போது 7வதாக மியூடென்ட் ஆகி பரவியுள்ள கொரோனா வைரஸ் உலகை ஒட்டு மொத்தமாக ஆட்டி வைத்து விட்டது.

முதல் 6-வது வகை கொரோனா வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்த ஹாலந்து விஞ்ஞானிகள் 10 பேரும், இதன் அடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்திருந்தனர்.

சீனாவில் இந்த வைரஸ் பரவியதும் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகளின் அடிப்படையில் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர்.

இதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்தனர். அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த சோதனை சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்துவிட்டால் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கிவிடும்

Tags : #CORONA #VACCINE #HOLLAND #COVID-19 #DISCOVER