இந்தியாவில் 4-வது 'உயிரைப்' பறித்த கொரோனா... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்தது அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 167 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கிறார். இதை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல இணை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாபை சேர்ந்த முதியவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். இந்தியாவில் இதுவரை உயிரிழந்த நான்கு பேருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
