"இந்திய முஸ்லீம்களுக்கு பிரச்சனை வந்தால்"... குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 05, 2020 02:39 PM

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று, நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

rajinikanth press meet about caa students protest

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் செய்யவில்லை. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றனர்.

என்பிஆர் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் அதை எதிர்ப்பேன்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக  மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்சினை,'' என்றார்.

Tags : #RAJINIKANTH #CAA #NPR #MUSLIMS