“போராடுங்க.. ஆனா இதை செய்யாதீங்க.. உங்களுக்கு இவரு உதவுவார்!”.. ஷாஹீன் பாக் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 18, 2020 05:12 PM

டெல்லி ஷாஹீன் பாக்கில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா தொடர்பான ஆர்ப்பாட்டங்களை நடத்த நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அனுமதித்து உறுதி செய்துள்ளது.

Protest but dont block the road, SC to Shaheen Bagh Protesters

இது பற்றிய வழக்கில் ‘ஜனநாயகம் பல வழிகளிலும் இயங்குவதாகவும், போராட விரும்புபவர்கள், போராட வேண்டுமானால் போராடுங்கள்’ என்றும்,  ‘CAA பற்றிய அனைத்து மனுக்களையும் விசாரித்து உச்ச நீதிமன்றம் பரிசீலித்து அளிக்கவுள்ள இறுதித் தீர்ப்பு வரை காத்திருக்க முடியாதவர்கள் நேரடியாக பொதுமக்களிடையே விவாதிக்கலாம்’ என்றும் அதற்கு இருக்கும் தடைகளை விலக்குவதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால் அதே சமயம், சட்டத்துக்கு புறம்பான ஒழுங்கீனங்கள், பொதுமக்களின் அன்றாட தேவையான போக்குவரத்து பாதிக்க்கப்படும் வகையில் சாலைகள் உள்ளிட்ட பொதுவழித்தடங்களை மறித்தல் உள்ளிட்டவற்றை செய்யாமல், அதாவது யாருக்கும்  பாதிப்பு இன்றி போராட்டத்தை தொடருங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு போராட்டக் காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை அமைதியான முறையில் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை உருவாக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்கிற பொறுப்பு மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Tags : #SHAHEENBAGHPROTESTS #CAA