'மோசமான' அனுபவம் இது... டாக்ஸி டிரைவரின் 'முறையற்ற' நடவடிக்கையால்... அதிர்ச்சிக்குள்ளான 'பிரபல' நடிகை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jan 16, 2020 07:28 PM

உபேர் டாக்சியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை நடிகை சோனம் கபூர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

Sonam Kapoor shares her worst Uber experience in london

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான சோனம் கபூர் தற்போது லண்டனில் இருக்கிறார். இந்தநிலையில் உபேர் டாக்சியில் பயணித்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''லண்டனில் நான் உபேர் டாக்சியில் பயணம் செய்தபோது அந்த டிரைவர் நிதானமிழந்த நிலையில், கூச்சலிட்டவாறு வாகனத்தை இயக்கியதை பார்த்து நான் கலங்கி போய்விட்டேன். சிறந்த மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு பொது வாகனங்களை பயன்படுத்துங்கள்,'' என கேட்டுக் கொண்டிருக்கிறார். சோனமின் இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #TWITTER #SONAMKAPOOR