இங்க வாங்க, அடிக்க எல்லாம் மாட்டேன், வாங்க ... பொது இடங்களில் சுற்றி திரிந்த மக்களுக்கு ... போலீசாரின் நூதன தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 24, 2020 06:35 PM

மகாராஷ்டிராவில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி பொது இடங்களில் நடமாடிய மக்களை போலீசார் தோப்புக்கரணமிட சொன்ன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Policemen from Maharasthra gives a good punishment for people

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் மக்கள் ஒன்றாக கூடவும், வானங்களில் அவசியம் இல்லாமல் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் வாகனங்களில் வெளியில் சுற்றி திரிந்த மக்களை அந்த பகுதியில் பணியில் இருந்த போலீசார் அழைத்து தோப்புக்கரணமிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து அந்த மக்களும் தோப்புக்கரணமிட்டு பின் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #MAHARASTRA #INDIA