மீண்டும் முதலில் 'இருந்து' ... 'கொரோனா' குறித்த புதிய தகவலால் ... 'அச்சத்தில்' உறைந்த மக்கள் !

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Mar 06, 2020 02:49 PM

கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்து குணமடைந்தவர்களுக்கும், மீண்டும் வைரஸ் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Corona Virus will spread again to the people.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் என்னென்ன முன்னிச்செரிக்கைகளை கையாள வேண்டும் என்பதிலும் உலக மக்கள் கவனமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரசிற்காக தற்போது கொடுக்கப்பட்டு வரும் நோய் எதிர்ப்பு மருந்துகள் பயனளித்தாலும் அது நீண்ட காலம் நீடித்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது மக்களிடையே மீண்டும் மிகப் பெரிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA VIRUS #INDIA #CHINA