'வராம இருக்குறது நல்லது தான்' ... மண்டபம் முழுவதும் காலி ... சுய ஊரடங்கு நாளில் நடைபெற்ற திருமணம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுய ஊரடங்கு இன்று இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கு உத்தரவை இன்று கடைபிடிக்க வேண்டி இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே போல பல பகுதிகளில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் சிறந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி அருகே உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் யாரும் இல்லாமல் மண்டபம் வெறிச்சோடிய நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இது குறித்து மணமக்கள் கூறுகையில், 'எங்களது திருமணத்தின் போது உறவினர்கள் இல்லாதது வேதனையளித்தாலும் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவை வரவேற்கிறோம்' என தெரிவித்தனர்.
மண்டபத்தில் வரும் மக்கள் மஞ்சள் தண்ணீர் மற்றும் சோப்புகளை கொண்டு கை கழுவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
