'கொரோனா' வைரஸ்னா என்ன ? ... 'நாங்க' எப்படி 'பாதுகாப்பா' இருக்குறது ? ... குழந்தைகளின் கேள்விகளுக்கு விடை சொல்லும் 'வாயு' காமிக்ஸ் !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 11, 2020 03:41 PM

கொரோனாவிலிருந்து சிறுவர் சிறுமிகள் தங்களை காத்து கொள்வது எப்படி என்பது குறித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Central Government released an awareness comics for the children

கேரளா, தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லி என இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் 'குழந்தைகள், வாயு மற்றும் கொரோனா(சண்டையில் யார் ஜெயிப்பார்கள்)' என்ற பெயரில் மத்திய அரசு காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள இந்த காமிக்ஸ் புத்தகதம் 22 பக்கங்களைக் கொண்டது.

இதில் வரும் 'வாயு' என்னும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து அதிலிருந்து எப்படி தங்களை காத்துக் கொள்வது என்பது வரையிலான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களையும் விளக்கி வைக்கிறார். குழந்தைகளிடம் ஒரு விஷயத்தை அறிவுரையாக எடுத்து சொல்வதை விட காமிக்ஸ் மூலம் தெளிவு செய்தால் குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு எளிதாக சென்றடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சண்டிகரை சேர்ந்த சுகாதார உயர் அதிகாரிகளின் உதவியோடு, மத்திய அரசின் சுகாதார மற்றும் பெண்கள் நலத்துறை இதை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vaayu Link : https://www.mohfw.gov.in/Corona_comic_PGI.pdf

Tags : #CORONA VIRUS #COMICS #CENTRAL GOVERNMENT #INDIA