'1500 மாஸ்க் செய்து அவரே எடுத்துட்டு வந்துருக்கார்...' 'கொரோனா பரவுவதை தடுப்பதற்காக...' மனிதம் காத்த தையல் கடைக்காரர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 24, 2020 05:48 PM

கொரோனா பரவுதலை தடுக்க சொந்த செலவில் 1500 முகக்கவசம் அளித்த ஈரோடு தையல் தொழிலாளியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

1500 masked sewing cord at own cost to prevent corona spread

தற்போது தமிழகத்தை தடுமாற வைத்து வரும் கோவிட்19 - கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு மிக தீவிர கண்காணிப்புகளையும், கட்டுப்பாடுகளையும் வலியுறுத்தி வருகிறது. மேலும் பல தனிநபர்களும் தங்களால் முயன்ற அளவு பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மிகவும் அவசியமானது முகக்கவசம். பல்வேறு இடங்களில் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்ட ஆனந்த் என்பவர் 1500 முகக் கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி தன் சொந்த செலவிலேயே பனியன் துணியில் முகக்கவசம் தயாரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த முகக் கவசங்களை பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்து சென்றனர்.

Tags : #FACEMASK #CORONAVIRUS