ஒரே நாளில் 19 பேர் பாதிப்பு ... இந்தியாவில் அதிகரிக்கும் எண்ணிக்கைகள் ... கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகள்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 23, 2020 11:22 AM

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Corona virus affected number incresed in India today

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்று உலக நாடுகள் பலவற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் இந்தியாவில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 18,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களை முடக்க வேண்டி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முடக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA VIRUS #INDIA