இந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ஹைதராபாத்திலுள்ள காக்னிசன்ட் நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முதலாக கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பினர். அதன்பிறகு இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பில்லை என கருதப்பட்ட நேரத்தில், கடந்த திங்கட்கிழமை 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளியான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இயங்கிவரும் காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “நமது ஹைதராபாத் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் மூடப்படுகிறது. நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் முறையான அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.