‘கொடூர கொரோனா அச்சுறுத்தல்’.. இந்தியாவுக்கு உதவி செய்ய நாங்க ரெடி’.. களமிறங்க உள்ள சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 24, 2020 02:58 PM

கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

How to control COVID19 China ready to share their experience to India

கொரோனா தடுப்பு தொடர்பாக காணொலி காட்சி மூலம் நடந்தப்பட்ட மாநாட்டில் சீனா, இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது தொற்றுநோய் தடுப்பு அனுபவம் குறித்து சீன வல்லுநர்கள் பகிர்ந்துகொண்டனர். மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் சீனா கூறியது.

இதுகுறித்து பேசிய சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷீவாங், Covid-19 வந்த போது இரு நாடுகளும் நல்ல தொடர்பில் இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு அனுதாபக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் சீனத் தரப்புடன் தொலைபேசியில் பேசினார். நாங்கள் இந்திய தரப்பில் இருந்து உதவிகள் பெற்றுள்ளோம். அதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது நாங்கள் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளோம். சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் சரியான உதவிகளையும், வசதிகளையும் வழங்கி வருகிறோம். இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலையை கண்காணித்து வருகிறோம். வைரஸ் அனைவருக்குமே சவால்தான். இந்த நேரத்தில் எங்களின் அனுபவத்தை இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம். இந்தியாவுக்கு உதவி செய்ய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக இருந்தபோது இந்தியா 15 டன் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகள், கையுறைகள் ஆகியவற்றை ராணுவ விமானம் மூலம் சீனாவுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சீனாவில் ஹன்டா என்ற புதிய வைரஸால் ஒருவர் பலியாகி மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COVID19 #CORONAVIRUS #CHINA #INDIA #STAYHOMESTAYSAFE