காதலியை 'திருமணம்' செய்துவைக்க... பெற்றோர் மறுப்பு... சோகத்தில் ஐடி ஊழியர் எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலியை திருமணம் செய்துவைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஐடி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர்(29) பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். தான் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்கும்படியும் ஜான் தன்னுடைய பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். பதிலுக்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் விரக்தி அடைந்த ஜான் சம்பவ தினத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்,து தற்கொலை செய்து கொண்ட ஜான் கிறிஸ்டோபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜானின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
