காதலுடன் தனிமையில்.. வீடியோ எடுத்து மிரட்டிய 'பஸ் டிரைவர் உட்பட 5 பேர்'.. மாணவி பகீர் முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 12, 2019 05:40 PM

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

College girl suicide attempt after youths blackmailed her

தினமும் கல்லூரி பேருந்தில் செல்லும்போது வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒருநாள் மாணவி, தன் காதலனுடன் தனிமையில் இருந்ததாகவும், அதனை அந்த மாணவனின் நண்பர்கள் 5 பேர்  ரகசியமாக படம் பிடித்ததாகவும் தெரிகிறது.

அதன் பின்னர், மாணவியை தங்களுடன் இணங்குமாறு 5 பேர் கொண்ட அந்த கும்பல் தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், அதற்கு இணங்காத மாணவியை, அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், அதையும் வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு பல முறை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த நிலையில்தான் இந்த சம்பவம் பற்றி வெளியில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி பஸ் டிரைவர் உட்பட, 5 பேரை காவலர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை இந்த கதிக்கு ஆளாக்கியுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #COLLEGESTUDENT #BUS