'காலில் கயிறைக் கட்டி...' 'நடுரோட்டில் தரதரவென இழுத்து..' சாலை அகலமானதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 03, 2020 07:23 PM

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பெண்களின் கால்களில் கயிறைக் கட்டி சாலையில் இழுத்துச்செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

women who refused to give land for road construction

மேற்குவங்க மாநிலம் தினாஞ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிரிகோனா தாஸ் மற்றும் சோமா தாஸ். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாலை பணிகள் மேற்கொள்ள அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் பஞ்சாயத்துத் தலைவரின் கோரிக்கையின் பேரில் நிலம் கேட்கப்பட்டுள்ளது.

முதலில் 12 அடி அகலத்தில் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் தங்கள் ஊரின் நலனைக் கருத்தில் கொண்டு சாலைக்காக நிலம் கொடுக்க முடிவு செய்தனர். இதில் ஸ்மிரிகோனா தாஸும் சம்மதம் தெரிவிக்க சாலை பணிகள் மும்மரமாக தொடங்க ஆரம்பித்து விட்டனர். இதனிடையே 12 அடி அகலம் சாலை அமைக்கப்படும் என கூறிவிட்டு பிறகு ஒரு மடங்கு அதிகப்படுத்தி 24 அடி அகலத்திற்கு சாலை பணிகள் நடந்துள்ளது.

இதனை அறிந்த ஸ்மிரிகோனா தாஸ் பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்காரிடம் முறையிட்டு இதுகுறித்து கேட்டுள்ளார். பிறகு ஆத்திரம் அடைந்த அவர் சாலை பணிகளை மேற்கொள்ள விடாமல் செய்துள்ளார். இதனால் அவரது சகோதரி சோமா தாஸ் மற்றும் ஸ்மிரிகோனா தாஸ் இருவரையும் அங்கிருந்த சில ஆண்கள் கயிறு கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Tags : #ROAD