‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 17, 2019 12:56 PM

கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஐபில் வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

IPL 2020 auction to go ahead as scheduled despite protests over CAA

வரும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 332 வீரர்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் உட்பட 143 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : #IPL #CRICKET #BCCI #IPL2020 #IPLAUCTION #IPLAUCTION2020