காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி... கண் இமைக்கும் நேரத்தில்... ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 16, 2019 03:49 PM

கன்னியாகுமரி அருகே காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

auto driver killed in auto car collided in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சகாய ரமேஷ் நாயகம். இவர் வழக்கம் போல் தனது சவாரிகளை முடித்து விட்டு அதிகாலையில்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குளச்சல் அருகே அவர் ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொட்டில்பாடு பகுதியில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராமல் ஆட்டோ இறங்கியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த  ஆட்டோ, எதிரில் வேகமாக வந்த காரின் மீது, நொடியில் மோதியது. பின்னர் அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சகாய ரமேஷ் நாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Tags : #DIED #ACCIDENT