‘தந்தை மடியில்’ அமர்ந்திருந்த சிறுமிக்கு.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்.. ‘சபரிமலைக்கு’ செல்லும் வழியில் கோர விபத்து..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 29, 2019 12:13 PM

தேனியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Theni 8 YO Girl Died In Car Accident On Way To Sabarimala Temple

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தன் மகள் வர்ஷா (8), மற்றும் நண்பர்கள் பூபாலன், பழனி உட்பட சிலருடன் சபரிமலைக்கு காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். இன்று அதிகாலை இவர்களுடைய கார் கம்பம் பிரதான சாலையில் போய்க்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் தந்தையின் மடியில் அமர்ந்து பயணித்த வர்ஷா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரில் இருந்த மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் சீனிவாசன் தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டி வந்ததாலேயே விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #KERALA #CAR #GIRL #FATHER #SABARIMALA