‘பங்குசந்தை கிடுகிடு உயர்வு’.. ‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின்’.. ‘புதிய அறிவிப்பு தான் காரணமா..?’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 20, 2019 02:17 PM

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Sensex gains 2000 points Nifty tops 11300 points

இந்திய பொருளாதாரத்தை 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலராக கொண்டு வரும் இலக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே பல சலுகைகளை தொழில் முனைவோருக்கு அறிவித்துள்ள நிலையில் தற்போது அவர் மேலும் சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளார்.

அதன்படி அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் எனவும், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி எனப்படும் வருமான வரி 22 சதவிகிதமாக குறைக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 2,011 புள்ளிகள் உயர்ந்து 38,105 புள்ளிகளை எட்டியுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 11,300 புள்ளிகளை எட்டியுள்ளது.

Tags : #SENSEX #NIFTY #INDIA #SHAREMARKET #FINANCEMINISTER #NIRMALASITHARAMAN