VIDEO: ‘இப்டியா பண்ணுவீங்க’!.. ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண்.. ‘ஹோலி’ பண்டிகையில் நடந்த கொடுமை..! கொதிக்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹோலி பண்டிகையின்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்கள் மீது அத்துமீறி வண்ணங்களை பூசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த 10ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் சண்டிகர் மாநிலத்தில் சாலையில் இளைஞர்கள் பலர் ஆரவராத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். சாலையில் செல்லும் நபர்கள் மீது வண்ணங்களை பூசி விளையாடினர்.
அப்போது இருசக்கரத்தில் சென்ற இளம்பெண்ணின் மீது அவரது விருப்பம் இல்லாமல் வழுக்கட்டாயமாக வண்ணங்களை பூசினர். நூறுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதுமென லாவகமாக இருசக்கர வாகத்தை ஓட்டி அங்கிருந்து சென்றார்.
तो ये है आपकी होली..!!! शर्म आती है या वो भी गुलाल के साथ हवा में उड़ा दी..??? pic.twitter.com/iytc4RW7To
— Manoj Muntashir (@manojmuntashir) March 11, 2020
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹோலி பண்டிகையை பயன்படுத்தி பெண்களின் மீது அத்துமீறி வண்ணங்கள் பூசிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.