‘கடன் வாங்குவதில் இவர்கள் தான் அதிகம்’... ‘தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்’... ஆய்வு முடிவில் வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கடன் வாங்குவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என தெரியவந்துள்ளது. மேலும், தமிழகம் எத்தனையாவது இடம் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள சந்தைகளில் டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் ஆய்வு நடத்தி பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய கடன் சந்தையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாத முடிவில், இந்தியாவில், மூன்று கோடி பெண்கள் பல்வேறு விதமான கடன்களை வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தமாக கடன் வாங்கியோரில், பெண்களின் பங்கு, 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது 2013 செப்டம்பரில், 21 சதவீதமாக இருந்தது. கடந்த, 2019, மூன்றாம் காலாண்டில், 62 லட்சம் பெண்கள் கடன் வாங்குவது தொடர்பாக, விசாரணை நடத்தி உள்ளனர். ஆறு ஆண்டுகளில் இது, ஆறு மடங்கு அதிகம். மேலும், 63 லட்சம் கடன் கணக்குகள், பெண்களால் துவங்கப்பட்டுள்ளன.
இதேபோல, கடன் வாங்குவது தொடர்பாக விசாரித்த ஆண்களின் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில், 5.3 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கடன் கணக்கு துவங்கிய ஆண்களின் எண்ணிக்கையும், ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் கடன் வாங்குவதில், மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும் உள்ளது.
