“செல்ஃபி மோகத்தால் அதிவேக ரயில் மோதி 21 வயது பெண் பலி!”.. “அடுத்து நின்றிருந்த இன்னொரு பெண் செய்த காரியம்!”

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 27, 2020 09:04 AM

மேற்கு வங்கத்தில் உள்ள ஜால்பைகுரி ரயில்வே நிலையத்தில், செல்ஃபி எடுக்க முயன்ற 21 வயது பெண் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

selfie woman dies hit by train another woman jumped from bridge

அப்பகுதியில் உள்ள மெயினாகுரி கோச்சிங் செண்டர் மாணவர்கள் 100 பேர் அங்குள்ள கிஸ் ஆற்றுப்பாலத்தின் மீது இருந்த தண்டவாளத்தை பொருட்படுத்தாமல் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த 21 வயது இளம் பெண், சிலிகுரியில் இருந்து வந்த Alipurduar-bound பயணிகள் ரயில், வந்த வேகத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் தொடர் நிகழ்வாக, கொஞ்ச தூரம் தள்ளி நின்றபடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த இன்னொரு பெண், ரயில் தன்னை நெருங்கிவிட்ட நிலையில், தன் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக பாலத்தில் இருந்து ஆற்றை நோக்கி குதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடி வருகிறார்.

Tags : #TRAINACCIDENT #WESTBENGAL #WOMEN #SELFIE