ஓடும் 'டெம்போவில்' அடைத்து வைத்து... 'இரவு' முழுவதும் 'கதறித்' துடித்த பெண்... 'கணவனிடம்' கோபித்துக் கொண்டு சென்றதால் நேர்ந்த 'கதி'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 13, 2020 01:45 PM

புனே அருகே, ஓடும் டெம்போவில் இரவு முழுவதும் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Driver a cleaner who raped the woman all night at a running tempo

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 11ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். எங்கே போவது என்று தெரியாமல் சுற்றித் திரிந்த அவர், ஒரு கட்டத்தில் வீட்டுக்கே சென்று விடலாம் என முடிவெடித்தார். இதையடுத்து  இரவு 11 மணியளவில் ஆலந்தி சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக வந்த டெம்போ ஒன்றை கைகாட்டி நிறுத்திய அந்த பெண் தன்னை தன் வீட்டருகே இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.

அந்த பெண்ணை தங்களது டெம்போவில் ஏற்றிக் கொண்ட அவர்கள், அந்த பெண் கூறிய பகுதிக்கு செல்லாம், மோஷி, பிம்ப்ரி-சிஞ்ச்வட், ஹிஞ்சேவாடி, பூனாவலே என பல இடங்களுக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் டெம்போவிலேயே அந்த பெண்ணை இருவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை விரைவு சாலையில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானம் அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் சிர்காவ் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை  சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதித்தனர்.

Tags : #PUNE #DRIVER #CLEANER #TEMPO #RAPED #WOMEN