பெண்கள், குழந்தைகளை... தொந்தரவு செய்தால் கவலை வேண்டாம்... தகவல் அளிக்க வாட்ஸ் ஆப் நம்பர்... சென்னை போலீஸ் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 18, 2019 03:28 PM
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, வாட்ஸ் ஆப் எண், ஃபேஸ்புக் மற்றும் இமெயில் உள்ளிட்ட முகவரிகள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் வகையில் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. அதன் ஒருபகுதியாக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக, மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவலன் என்ற செயலியையும் சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவினாலோ அல்லது தெரியாத நபர்களால் தொந்தரவு ஏற்பட்டாலோ தகவல் தெரிவிக்க, வாட்ஸ் ஆப் எண், ஃபேஸ்புக் மற்றும் இமெயில் முகவரி தரப்பட்டுள்ளது. அதன்படி, 7530001100 என்ற வாட்ஸ் ஆப் எண், www.facbook.com/chennai.police என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும், dccwc.chennai@gmail.com என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.