'இது பார் இங்க பூசு' .. 'இந்தா பேக்ல பூசு' .. 'ஹோலி'மயமான சேப்பாக்கம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 11, 2020 11:27 AM

நேற்று ஹோலியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

Chennai Super Kings celebrates Holi in Chepauk

ஐ.பி.எல் போட்டிகளை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை தினந்தோறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை அணி வீரர்கள் ஹோலி கொண்டாடிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சென்னை அணி வீரர்கள் முரளி விஜய், புதிதாக சேர்க்கப்பட்ட ஜெகதீஷன், சாய் கிஷோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் தோனி, ஹர்பஜன் சிங் உட்பட அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றையும் ஹோலி ஸ்பெஷலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Chennai Super Kings (Twitter)

 

 

Tags : #CHENNAI SUPER KINGS #HOLI #MURALI VIJAY #CHEPAUK