'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 22, 2020 01:20 PM

ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் அணி விளையாடவிருக்கிறது. ஆஸ்திரேலிய போட்டியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

Sanju Samson replaces injured Shikhar Dhawan in T20Is

அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் பிரித்வி ஷாவுக்கும், டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய போட்டியின்போது காயமடைந்த மற்றொரு இளம்வீரரான ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். மற்றொரு இளம்வீரரான சிவம் துபேவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இளம்வீரர்களுக்கு அதிகளவு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் பிசிசிஐ இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது. கடைசியாக கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின்போது நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அத்தோடு இந்திய அணியின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வந்தது.

அதற்குப்பின் தற்போது நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுவதால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உலகக்கோப்பை தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஒருநாள் அணி விவரம்:-

1. விராட் கோலி(கேப்டன்) 2. ரோஹித் சர்மா(துணை கேப்டன்) 3. கே.எல்.ராகுல் 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5.மணீஷ் பாண்டே 6. சிவம் துபே 7. பிரித்வி ஷா 8. ரிஷப் பண்ட் 9. குல்தீப் யாதவ் 10. யஷ்வேந்திர சாஹல் 11. ரவீந்திர ஜடேஜா 12. ஜஸ்பிரிட் பும்ரா 13. நவ்தீப் சைனி 14.முஹம்மது ஷமி 15. ஷர்துல் தாகூர் 16. கேதார் ஜாதவ்.

டி20 அணி விவரம்:-

1. விராட் கோலி(கேப்டன்) 2. ரோஹித் சர்மா(துணை கேப்டன்) 3. கே.எல்.ராகுல் 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5.மணீஷ் பாண்டே 6. சிவம் துபே 7. சஞ்சு சாம்சன் 8. ரிஷப் பண்ட் 9. குல்தீப் யாதவ் 10. யஷ்வேந்திர சாஹல் 11. ரவீந்திர ஜடேஜா 12. ஜஸ்பிரிட் பும்ரா 13. நவ்தீப் சைனி 14.முஹம்மது ஷமி 15. ஷர்துல் தாகூர் 16. வாஷிங்டன் சுந்தர்.