‘எவ்வளோ சொல்லிப் பார்த்தும் கேட்கல’... 'காதல் மனைவிக்கு'... 'கணவரால் நேர்ந்த கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 10, 2019 10:24 PM
ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிட மறுத்த காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே நெடுங்குளம் வலசைப் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைப் பிரியன், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை மீறி, திருமணம் செய்து கொண்டநிலையில், தோட்டத்தில் வீடு கட்டி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், மனைவி அபிநயா அதேப் பகுதியை சேர்ந்த மற்றொரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வந்ததாகத் தெரிகிறது. இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், பலமுறை மனைவியை கண்டித்துள்ளார் வெள்ளைப்பிரியன்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை, கடும் வாக்குவாதம் எழுந்தநிலையில், ஆத்திரத்தில் கணவர் வெள்ளைப் பிரியன், மனைவி அபிநயாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மனைவியின் உடலை அருகில் உள்ள கிணற்று குழியில் போட்டுவிட்டு வெள்ளைப்பிரியன் தப்பியோடியுள்ளார். விசாரணை நடத்திவரும் அலங்காநல்லூர் போலீசார், தப்பி ஓடிய வெள்ளைப்பிரியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவத்தால், அவர்களது இரண்டு குழந்தைகளும் தனியாக தவித்து வருகின்றனர்.
