காருக்குள் 'மிளகாய்த்தூள்'.. கல்யாண 'பத்திரிக்கைகள்'.. திருப்பூரை 'அதிரவைத்த' இரட்டைக்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 13, 2019 03:28 PM

பத்திரிக்கை கொடுக்க வந்த தம்பியையம், அவரது மனைவியையும் சொந்த அக்காவே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Madurai couple killed own sister in Tirupur, police investigate

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் உள்ள சுக்காலியூர் அருகே, நேற்று முன்தினம் ரோடு ஓரமாக, டாடா இண்டிகா கார் ஒன்று நின்றிருக்கிறது. காலை முதல் மாலை வரை அந்த கார் அங்கேயே நின்றதால் சந்தேகம் கொண்ட நெடுஞ்சாலைத்துறை ரோந்து ஊழியர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் அந்த காரை எடுத்துச்சென்று பரிசோதனை செய்தனர். அந்த காருக்குள் நிறைய திருமண பத்திரிக்கைகள் இருந்துள்ளன. அதில் இருந்த நம்பரை எடுத்து போலீசார் போன் செய்துள்ளனர். அப்போது அந்த கார் மதுரையை சேர்ந்த செல்வராஜ்-வசந்தாமணி ஆகியோருடையது என்பதும் தங்களது மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வெள்ளக்கோவில் வந்ததும் தெரியவந்தது.

கடந்த 10-ம் தேதி அக்கா வீட்டில் பத்திரிக்கை வைத்துவிட்டு செல்வராஜ்-வசந்தாமணி இருவரும் வீடு திரும்பவில்லை என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காருக்குள் மிளகாய்த்தூள் ஆங்காங்கே தூவப்பட்டு இருந்தது. காரின் டிக்கியில் அரிசி, மளிகை சாமான்கள் இருந்தன. இதனால் மோப்ப நாயை வைத்து போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் செல்வராஜின் அக்கா கண்ணம்மாவே இருவரையும் கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது. வீட்டின் பின்புறம் இரண்டு குழிகள் வெட்டப்பட்டு அதில் செல்வராஜ், வசந்தாமணி உடல்களை கண்ணம்மா புதைத்துள்ளார். கொலைகளை இவரே செய்தாரா? இல்லை கூலிப்படை வைத்து செய்தாரா? கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியை அதிர வைத்துள்ளது.

Tags : #MURDER