'விஜயதசமி கொண்டாட வரல'...'ஆசிரியர் குடும்பத்தை இப்படி சிதைச்சிட்டாங்களே'... உறைய வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 10, 2019 10:28 AM

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Three of a family brutally murdered in West Bengal

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு,  பியூட்டி என்ற மனைவியும் அங்கன் என்ற மகனும் உள்ளனர். மகிழ்ச்சியாக இருந்த சிறிய குடும்பம் தற்போது உருக்குலைந்து போயுள்ளது. இவர்கள் மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்கள்.

ஆசிரியர் குடும்பத்தை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கோர சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில் '' பள்ளி ஆசிரியர் போந்து கோபால் வீட்டின் அருகே விஜயதசமி பூஜைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும் அந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள் கோபாலின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, கோபால், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்த நிலையில்,  திங்கட்கிழமை இரவு கொலை நடைபெற்றுள்ளது'' என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பமே சிதைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Tags : #MURDER #KILLED #WEST BENGAL #MURSHIDABAD DISTRICT