'பேராசிரியை' என பொய்.. கருக்கலைப்பு .. 6 பேர் கொலையில்.. அதிர்ச்சி விவரங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 09, 2019 02:52 PM

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இதற்கு காரணமான ஜோலி என்ற பெண்ணை கைது செய்தனர். தனது குடும்பத்தையே விஷம் வைத்து கொன்ற ஜோலி தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Kerala Cyanide Case: Jolly Hated Girls, Tried to kill children

இந்தநிலையில் இதுதொடர்பாக மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஜோலியின் தோழிகள், அக்கம்-பக்கம் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பெண் குழந்தைகள் என்றாலே ஜோலிக்கு சுத்தமாக பிடிக்காதாம். பெண் குழந்தை வேண்டாம் என்ற காரணத்தால் இரண்டு முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறாராம். இதனால் தனது குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளையும் அவர் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும் என்ஐடி பேராசிரியை என அக்கம்-பக்கத்தாரிடம் பொய் சொல்லி அதற்கேற்றவாறு தினமும் காலை காரில் சென்று, காரில் வந்துள்ளார். ஜோலியின் தோழியிடம் விசாரணை நடத்தியபோது அவள் இப்படி செய்தால் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை என தெரிவித்து உள்ளார். இத்தனை கொலைகளை செய்துவிட்டு அதுகுறித்த எந்தவித பதட்டமும் இல்லாமல் ஜோலி கடந்த 17 வருடங்களாக அப்பகுதி மக்களிடம் பழகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.