யார் அடுத்த ஸ்ரீதர்?.. அதிகாரப்பகையால்.. அடுத்தடுத்த கொலைகள்.. பதறும் காஞ்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 09, 2019 11:36 AM

காஞ்சிபுரத்தை ஆட்டிப்படைத்த ரவுடி ஸ்ரீதர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்தார். அவர் இறந்த சில மாதங்கள் வரை அமைதியாக இருந்த காஞ்சிபுரத்தில் தற்போது மீண்டும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

Fight between Sridhar\'s Close relatives in Kanchipuram

காஞ்சிபுரத்தில் மறைந்த ஸ்ரீதர் தனபாலனின்  டிரைவர் தினேஷ் மற்றும் மைத்துனர் தனிகா. ஸ்ரீதர்  மறைவுக்கு பிறகு யார் அடுத்த ஸ்ரீதர்? என்ற போட்டியில்  தினேஷின் கூட்டாளிகளும், தணிகா கூட்டாளிகளும் மாறி மாறி வெட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் டிரைவர் தினேஷ் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் என்பவரை தனிகா கூட்டாளிகள் பேருந்தில் சரமாரியாக வெட்டியதில் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் எதிரொலியாக இச்சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த தனிகாவின் நெருங்கிய நபரான ஸ்ரீதரின் சித்தப்பா மகன் கருணாகரன் மற்றும் விக்னேஷ் இருவரையும் டிரைவர் தினேஷ் கூட்டாளிகள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்னேஷ் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிகாவின் நெருங்கிய உறவினரான கருணாகரன் மற்றும் விக்னேஷ் காஞ்சிபுரம் வணிகர் வீதி தெருவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்த கருணாகரன் மற்றும் விக்னேஷ் பேசிக்கொண்டிருந்த பொழுது ஹெல்மெட் அணிந்தபடி டிபன் பாக்ஸ் கொடுப்பது போல் வந்த 7 மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்து இருந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விக்னேஷ் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுப்பி வைத்து, அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் அடுத்த ஸ்ரீதர்? என்னும் போட்டியில் மாறி மாறி இரு தரப்பினரும் வெட்டிக்கொள்வதால், கோயில் நகரமான காஞ்சிபுரம் கொலை நகரமாக மாறி வருகிறது உடனடியாக காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து இரண்டு கூட்டாளிகளின் கொலை செயல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #MURDER